
ப்ளக்ஸ்மார்ட் நிறுவனத்தின் சார்ஜிங் கட்டமைப்புக்கு அங்கீகாரம்
சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் மின்சார வாகன சார்ஜர் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ப்ளக்ஸ்மார்ட்', முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சார்ஜிங் கட்டமைப்புக்காக, இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆதரவில் துவங்கிய இந்த நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பி.எல்.சி., எனும் மின்சக்தி தொடர்பு மாட்யூல்களைக் கொண்டு, புதிய மின்சார வாகன சார்ஜரை அறிமுகப்படுத்திஉள்ளது.
முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த சார்ஜிங் கட்டமைப்புக்கு, இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெற்ற முதல் இந்திய நிறுவனமாகியுள்ளதுப்ளக்ஸ்டார்ட்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 240 கிலோவாட் நேரடி அதிவேக மின்சார சார்ஜர்கள், அதி நவீன கார்கள், வணிக வாகனங்களுக்கு ஏற்றவை.