'அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு நல்ல முறையில் முன்னேற்றம்'
'அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு நல்ல முறையில் முன்னேற்றம்'
ADDED : டிச 11, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த விவாதங்கள் நல்ல முறையில் முன்னேற்றம், அடைந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்டத்தை விரைவில் இறுதி செய்வதற்காக, அமெரிக்க குழு நேற்று டில்லி வந்துள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பியுஷ் கோயல் இந்த குழுவுடன் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இதுதொடர்பான விவாதங்கள் நல்ல முறையில் முன்னேறி வருவதாகவும், கடந்த சில நாட்களில் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

