இதுவரை இரண்டு லட்சம் ஸ்டார்ட் அப்களுக்கு அங்கீகாரம்
இதுவரை இரண்டு லட்சம் ஸ்டார்ட் அப்களுக்கு அங்கீகாரம்
ADDED : டிச 11, 2025 01:13 AM

புதுடில்லி: இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கீழ், தற்போது வரை 2.01 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களால், நாடு முழுதும் 21 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2025 ஜூன் வரை, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 14 துறைகளில், 1.88 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, உற்பத்தி அல்லது விற்பனை 17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் 12.30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

