ADDED : பிப் 17, 2024 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:கடந்த டிசம்பர் காலாண்டுக்கான மொத்த வாகன விற்பனையில், உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துஉள்ளது.
மொத்தம் 8.22 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ததன் வாயிலாக, உத்தர பிரதேச மாநிலம் வாகன விற்பனையில் முதலிடத்தை பிடித்து உள்ளது.
இதற்கு அடுத்தபடி யாக, மகாராஷ்டிரா 6.88 லட்சம் வாகனங்களுடன் இரண்டாவது இடத்திலும்; குஜராத் 4.21 லட்சம் வாகனங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழகம், 4.19 லட்சம் வாகனங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.