உர ஏற்றுமதியை நிறுத்திய சீனா யூரியா விலை அதிகரிக்க வாய்ப்பு
உர ஏற்றுமதியை நிறுத்திய சீனா யூரியா விலை அதிகரிக்க வாய்ப்பு
ADDED : அக் 22, 2025 12:11 AM

புதுடில்லி: யூரியா மற்றும் சில சிறப்பு ரக உரங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளதால், நம் நாட்டில் இவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நம்நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் - மார்ச் இடையே ராபி பருவ பயிரிடுதல் நடைபெறுகிறது. சீனாவிலிருந்தே நாம் அதிகளவிலான உரங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே உரங்களின் ஏற்றுமதிக்கு முன்னறிவிப்பின்றி, கட்டுப்பாடுகளை விதித்து வந்த சீனா, கடந்த 15ம் தேதி முதல் இவற்றின் ஏற்றுமதியை காலவரம்பின்றி நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து உர தொழில்துறை சங்க தலைவர் ராஜீப் சக்ரவர்த்தி தெரிவித்ததாவது:
அனைத்து நாடுகளுக்கான உர ஏற்றுமதியையும் சீனா நிறுத்தியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகி றது.
ஏற்கனவே, சிறப்பு ரக உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும். இந்தியா அதன் சிறப்பு ரக உர தேவையில் 95 சதவீதத்தை, சீன இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்கிறது.
அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு பின்னும் தடை தொடரும்பட்சத்தில், பெரும் சிக்கலாக மாறும். தென் ஆப்ரிக்கா, சிலி மற்றும் குரோஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்து வந்தாலும், இங்கு வெகு சில உரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நம் நாட்டின் சிறப்பு ரக உர தேவை ஆண்டுக்கு 2.50 லட்சம் டன்னாக உள்ளது. இதில் 65 சதவீதம் ராபி பருவத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.
நடப்பு ராபி பருவத்துக்கு தேவையான உரங்களை வர்த்தகர்கள் ஏற்கனவே ஆர்டர் செய்துவிட்டதால் வினியோக தட்டுப்பாடு இருக்காது. ஆனால் விலை உயர வாய்ப்பு