தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.379 கோடி இழப்பு: வேதாந்தா ரூ.379 கோடி இழப்பு

வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.379 கோடி இழப்பு: வேதாந்தா ரூ.379 கோடி இழப்பு

வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.379 கோடி இழப்பு: வேதாந்தா ரூ.379 கோடி இழப்பு


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: குஜராத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்ததால், வேதாந்தா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பணிகளை பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி., ஏற்றுள்ளது.

இந்த பணிக்கான வேதாந்தாவின் ஒப்பந்தம் கடந்த 2023 ஜூனில் முடிந்தது. அதை நீட்டிக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதை எதிர்த்து வேதாந்தா டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கை கடந்த ஜூலை 22ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி., ஏற்றது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணை முடிந்துள்ள நிலையில், தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, இந்த திட்டம் தொடர்பான சொத்துகள் மற்றும் கிடைக்க வேண்டிய தொகைகளை முழுமையாக மீட்க முடியுமா என்ற தெளிவு இல்லாததால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 379 கோடி ரூபாயை இழப்பாக கணக்கில் பதிவு செய்துள்ளதாக வேதாந்தா தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us