தயாரிப்பு துறை பங்களிப்பில் நகரங்களை விஞ்சிய கிராமங்கள்
தயாரிப்பு துறை பங்களிப்பில் நகரங்களை விஞ்சிய கிராமங்கள்
ADDED : செப் 28, 2025 01:38 AM

புதுடில்லி:இந்தியாவின் மொத்த உற்பத்தியில் கிராமங்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரங்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு கீழ் சுருங்கி வருகிறது.
![]() |
மொத்த உற்பத்தி என்பது குறிப்பிட்ட காலத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றை குறிப்பது.
இதில், பிற நிறுவனங் களுக்காக உற்பத்தி செய்வதன் மூலம் ஈட்டப்படும் பணம், வாடகை அல்லது மின்சார விற்பனை போன்ற உற்பத்தி அல்லாத வழிகளில் தொழிற்சாலை ஈட்டும் வருமானம் ஆகியவையும் அடங்கும்.
![]() |
சமீபத்திய 2023 - -24ம் ஆண்டுக்கான தொழிற்சாலை சர்வேயில், நான்காவது ஆண்டாக தயாரிப்பு துறையில் நகரங்களின் பங்களிப்பு குறைந்து 49.50 சதவீதமாக பதிவாகி இருந்தது. முந்தைய 2021- - 22ம் ஆண்டு 48.70 சதவீதமாக குறைந்த நிலையில், சற்றே மேம்பட்டு உள்ளது.
பல்வேறு காரணிகளும் இதே போன்று கிராமங்களுக்கு மாறி இருப்பதை காட்டுகிறது. நகரங்களில் தொழிற்சாலைகள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆட்கள், பணியாளர்கள் ஊதியம், நிகர மதிப்பு என அனைத்தும் 2018- - 19ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2023- - 24ம் ஆண்டில் கணிசமாக குறைந்து உள்ளன.
நகரங்களின் தொழிற்சாலை பங்களிப்பு குறைந்து வருவதற்கு, நகரங்களில் நிலத்தின் மதிப்பு உயர்வு, சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் ஆகியவை நகரங்களுக்கு வெளியே தொழிற்சாலை அமைக்க காரணமாகும்.
நகரங்களின் தொழிற்சாலை பங்களிப்பு இப்போதைக்கு பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை. இது மேலும் குறையவே வாய்ப்புள்ளது.


