'காப்புரிமை' பெற்று தருவதாக மோசடி விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை
'காப்புரிமை' பெற்று தருவதாக மோசடி விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை
ADDED : நவ 14, 2024 03:35 AM

புதுடில்லி:காப்புரிமை பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, இந்திய காப்புரிமை அலுவலகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காப்புரிமை, வடிவமைப்பு, வணிக முத்திரை, புவிசார் குறியீடு ஆகியவற்றைப் பெற விண்ணப்பித்திருப்பவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சி நடப்பதாக தகவல் வந்துள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ள விபரங்களையும், அறிவுசார் சொத்துரிமை விண்ணப்ப தகுதி நிலையையும் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை கேட்டு, காப்புரிமை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
காப்புரிமை, வடிவமைப்பு, வணிக முத்திரை, புவியியல் குறியீடு பெற்றுத் தருவதாக கூறுபவர்களின் வலையில் விழாமலும், பணத்தை இழக்காமலும் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முற்றிலும் சட்டரீதியாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விதிகளின்படி மட்டுமே காப்புரிமையை அலுவலகம் வழங்கும். முறையற்ற எந்த நடவடிக்கையும் ஏற்கப்பட மாட்டாது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

