தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சோலார், காற்றாலை மின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்

சோலார், காற்றாலை மின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்

சோலார், காற்றாலை மின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கும்போது, திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் அவகாசம் வழங்கப்படும்,’’ என, மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் சூரிய சக்தி, காற்றாலை மின் நிலையங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ திட்டத்தை ஊக்குவிக்க, ‘தமிழக பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கை – 2026’ஐ, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் நிர்மல் குமார் நேற்று வெளியிட்டார்.

புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, ‘url : https://nces.tngecl.org/nces/main.php’ என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

சூரியசக்தி மின் திட்டங்களுக்கு இனி, இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இனி வரும் முதலீடுகள் பேட்டரி ஸ்டோரேஜ் வசதியுடன் வர வேண்டும் என்பதற்காக, இந்த கொள்கை வெளியி டப்பட்டு உள்ளது.

ஒரு மெகா வாட் அளவுக்கு மேல் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முதலீடு செய்ய வருவோர், மின் உற்பத்தி திறனில், 10 சதவீதம் அல்லது நான்கு மணி நேரம் மின்சாரத்தை சேமிக்கும் திறனுடன், பேட்டரி ஸ்டோரேஜ் அமைக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு, ‘டிரான்ஸ்மிஷன் சார்ஜ், வீலிங் சார்ஜ்’ விலக்கு அளிக்கப்படும். பேட்டரியில் சேமிக்கும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்யும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் அவகாசம் வழங்கப்படும். பழைய காலங்களை போல், சும்மா விண்ணப்பத்தை போட்டு வைப்பது, அதற்கு ஒப்புதல் பெறுவது, ஓராண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு கழித்து இடம் கூட வாங்காமல், பெயர் மாற்றம் செய்து விற்பது போன்ற செயல்களை செய்ய முடியாது.

விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை, இணையதளத்தில் முதலீட்டாளர்கள் அறியலாம். காற்றாலை மின் நிலையம் அமைக்கும்போதும், 10 சதவீதம் பேட்டரி அமைக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

விண்ணப்பிக்க

ஸ்கேன் செய்யவும்

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் அவகாசம் வழங்கப்படும். பழைய காலங்களை போல், சும்மா விண்ணப்பத்தை போட்டு வைப்பது, அதற்கு ஒப்புதல் பெறுவது, ஓராண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு கழித்து இடம் கூட வாங்காமல், பெயர் மாற்றம் செய்து விற்பது போன்ற செயல்களை செய்ய முடியாது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us