தென்கொரிய நிறுவனத்துடன் 'வீல்ஸ் இந்தியா' ஒப்பந்தம்
தென்கொரிய நிறுவனத்துடன் 'வீல்ஸ் இந்தியா' ஒப்பந்தம்
ADDED : செப் 29, 2025 11:30 PM

சென்னை :சென்னையை சேர்ந்த 'வீல்ஸ் இந்தியா' நிறுவனம், அதன் 'ஹைட்ராலிக் சிலிண்டர்' வணிகத்தை அதிகரிக்க, தென் கொரியாவின் 'எஸ்.ஹெச்.பி.ஏ.சி.,' என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. உலகளாவிய ஹைட்ராலிக் சிலிண்டர் வணிகத்தை விரிவுபடுத்தி, வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், இந்த ஒப்பந்தம், “ஹைட்ராலிக் சிலிண்டர் துறையில், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். இதுதொடர்பான வாய்ப்புகள் அதிகரித்தால், கூடுதல் முதலீடு செய்யப்படும்” என்றார்.
வாகனங்கள், கட்டுமான இயந்திரங்கள், டிராக்டர்களுக்கான சக்கரங்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. கனரக வாகனங்களுக்கு, ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகளையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின உற்பத்தி ஆலைகள், தமிழகம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்டில் அமைந்துள்ளது.
வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின், ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் உள்ளிட்ட அமைப்புகளில், இந்த ஹைட்ராலிக் சிலிண்டர்கள் பயன்படுகின்றன.