ADDED : ஆக 21, 2026 07:03 AM

திருப்பூர்: அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக வேண்டிய நிலையில், பருவமழை பொய்த்ததால் போதிய நீரின்றி நிலக் கடலை செடிகள் வயல்களிலேயே வாடி, கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கடலை தட்டுப்பாடு ஏற்பட்டு, எண்ணெய் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, குன்னத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நிலக்கடலை, சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஏலம் எடுக்கப்படும் நிலக்கடலை, கடலை எண்ணெய் தயாரிப்புக்கும், கடலை மிட்டாய் உற்பத்திக்கும் பெருமளவில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மழை இல்லாத காரணத்தால், நிலக்கடலை தட்டுப்பாடு ஏற்பட்டு, எண்ணெய் விலை உயரக் கூடும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
