ADDED : மே 31, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, தமிழகத்தின் துாத்துக்குடியில் அமைந்துள்ள நிலையில், இதன் துவக்கம், ஜூன் 30ம் தேதியில் இருந்து, ஜூலை 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், உள்நாட்டு மின்சார வாகன சந்தைக்குள் நுழைய, இந்திய வங்கிகளிடம் 1,700 கோடிக்கு கடன் பெற, இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்நிறுவனம் சார்பில், 'இந்திய செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதுதொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்' என கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக இந்திய நிதி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.