தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வெனிசுலாவில் மீண்டும் பணிகளை தொடங்கும் ஓ.என்.ஜி.சி.,

 வெனிசுலாவில் மீண்டும் பணிகளை தொடங்கும் ஓ.என்.ஜி.சி.,

 வெனிசுலாவில் மீண்டும் பணிகளை தொடங்கும் ஓ.என்.ஜி.சி.,


ADDED : ஆக 17, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அமெரிக்க தடைகள் காரணமாக வெனிசுலாவில் முழுமையாக செயல்பட முடியாமல் இருந்த ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு, அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு பணிகளை மீண்டும் விரிவுபடுத்த அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.



இது குறித்து ஓ.என்.ஜி.சி., நிதி இயக்குநர் அனுபம் அகர்வால் தெரிவித்ததாவது: நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் வெளிநாட்டு முதலீடு மற்றும் பணிகளை மேற்கொள்ளும் ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம், வெனிசுலாவின் சான் கிறிஸ்டோபல் பகுதியில் 40 சதவீத பங்கையும், கரபோபோ பகுதியில் 11 சதவீத பங்கையும் வைத்துள்ளது.

புதிய அனுமதியால், இங்கு கூடுதல் முதலீடு செய்து உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும், வெனிசுலாவில் இருந்து நிலுவையில் உள்ள 4,773 கோடி ரூபாய்க்கும் அதிகமான டிவிடெண்ட் தொகையை பெறுவதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சான் கிறிஸ்டோபல் பகுதியில் 2025-26 நிதியாண்டில் 2.65 லட்சம் டன் அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பதிவாகி உ ள்ளது.

இது அங்குள்ள முழு உற்பத்தி திறனில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. வெனிசுலாவில் 30,300 கோடி பீப்பாய் அளவுக்கு நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அங்குள்ள உற்பத்தியை மேலும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us