தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பாதுகாப்பு வசதி கோரி கன்டெய்னர் ஸ்கேனிங் பணியை புறக்கணிக்கும் தொழிலாளர்கள்

பாதுகாப்பு வசதி கோரி கன்டெய்னர் ஸ்கேனிங் பணியை புறக்கணிக்கும் தொழிலாளர்கள்

பாதுகாப்பு வசதி கோரி கன்டெய்னர் ஸ்கேனிங் பணியை புறக்கணிக்கும் தொழிலாளர்கள்


ADDED : நவ 09, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சி துறைமுகத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படாததைக் கண்டித்து, கன்டெய்னர் ஸ்கேனிங் பணிகளை தொழிலாளர்கள் இன்று (நவ.,9) முதல் புறக்கணித்து வருகின்றனர்.

கன்டெய்னர்களை சோதனை செய்யும் ஸ்கேனிங் இயந்திரம் வழியாக, தினமும் ஆறு முதல் ஏழு முறை செல்ல வேண்டியுள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் வாந்தி, தலைவலி, ரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஸ்கேனிங் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் ஏற்கனவே உறுதியளித்திருந்தனர். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, பி.எஸ்.ஆஷிக் தலைமையில் நடந்த டி.யு.சி.ஐ., தொழிலாளர் சங்கக் கூட்டத்தில், ஸ்கேனிங் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த போராட்டத்தால் கன்டெய்னர் சோதனை மற்றும் சரக்கு கையாளும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொழிலாளர்கள் கூறும் உடல்நல பாதிப்புகளுக்கும் ஸ்கேனிங் இயந்திரத்தின் கதிர்வீச்சுக்கும் தொடர்பு உள்ளதா என்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us