மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு இனி வரி விலக்கு கிடையாது
மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு இனி வரி விலக்கு கிடையாது
ADDED : பிப் 13, 2025 10:58 PM

புதுடில்லி:'மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கு, பிப்ரவரிக்குப் பிறகு கிடையாது' என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏழாவது பருப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், வரிவிலக்கை நீட்டிக்கும் திட்டமில்லை என அறிவித்தார்.
மேலும், மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு எவ்வளவு வரி விதிப்பது என்ற இறுதி முடிவை, மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு, கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல், மஞ்சள் பட்டாணிக்கு இறக்குமதி வரி விலக்கு அறிவித்தது. மூன்று முறை நீட்டிக்கப்பட்ட இந்த சலுகை, வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது.
இறக்குமதி
ஆண்டு பருப்பு மஞ்சள் பட்டாணி
2024 67 லட்சம் டன் 30 லட்சம் டன்
2025 55 லட்சம் டன் 44 லட்சம் டன்
(கணிப்பு)
அல்லது
2024 2025( கணிப்பு)
பருப்பு
67 55
மஞ்சள் பட்டாணி
30 44
(லட்சம் டன்னில்)