தொழிலதிபர்களுக்கு புதிய சாப்ட்வேர் 'ஜோஹோ' நிறுவனம் உருவாக்கியது
தொழிலதிபர்களுக்கு புதிய சாப்ட்வேர் 'ஜோஹோ' நிறுவனம் உருவாக்கியது
UPDATED : ஜன 24, 2026 02:40 AM
ADDED : ஜன 24, 2026 02:37 AM

கும்பகோணம்: தொழிலதிபர்களுக்கு பயன்படும் 'ஜோஹோ' இ.ஆர்.பி., என்ற மென்பொருளை, கும்பகோணம் அலுவலகத்தில் உருவாக்கி இருப்பதாக ஜோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தொழில் நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்களுக்கு உதவும் வகையில், இ.ஆர்.பி. , தளம் உதவி வருகிறது.
இதுவரை பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள்தான் இந்த சேவையை வழங்கி வந்தன. சேவைகளும் தனித்தனியே கிடைத்து வந்தன.
![]() |
அவற்றை ஒருங்கிணைத்து ஒரே தளத்தில் பெறும் வகையில், ஜோஹோ இ.ஆர்.பி ., உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜோஹோ நிறுவன இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், “தென்காசி மாடலை பின்பற்றி, கும்பகோணத்திலும் எங்களின் மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.
''இங்கே பணிபுரியும் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்கள்தான் இதை உருவாக்கியுள்ளனர். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், கிராம பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும் இங்கு அலுவலகம் துவங்கப்பட்டது.
'' வரும் காலத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இது இருக்கும்” என்றார்.


