sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சேமிப்பு பத்திரங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி

/

 சேமிப்பு பத்திரங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி

 சேமிப்பு பத்திரங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி

 சேமிப்பு பத்திரங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி


ADDED : ஜன 03, 2026 02:09 AM

Google News

ADDED : ஜன 03, 2026 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'புளோட்டிங்' வட்டி விகிதத்தில் உள்ள சேமிப்பு பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டியில், அடுத்த 6 மாதங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலங்களில், இந்த பத்திரங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோட்டிங் வட்டி விகிதம் என்றால் என்ன?



* பிக்சட் டிபாசிட்டில் சேமிக்கப்படும் பணம், அதன் முதிர்வுக் காலம் வரை வட்டி மாறாமல் இருக்கும். ஆனால், புளோட்டிங் வட்டி விகித சேமிப்பு பத்திரங்களில் வழங்கப்படும் வட்டி நிலையானது அல்ல.

* இந்த திட்டத்தில் 1,000 ரூபாய் முதல் முதலீட்டை துவங்கலாம். சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு, 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி மாற்றியமைக்கப்படும்.

* இது, என்.எஸ்.சி., எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் வழங்கும் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், என்.எஸ்.சி.,க்கு தற்போது 7.70 சதவீதம் வட்டி வழங்கப்படுவதால், சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி 8.05 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* வட்டி தொகை ஆண்டுக்கு இரண்டு முறை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* இந்த பத்திரங்கள் வாயிலாகக் கிடைக்கும் வட்டியை, முதலீடு செய்பவரின் ஆண்டு வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அவரின் வருமான வரம்புக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.

* இந்திய அரசால் இந்த சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்படுவதால், இவை பாதுகாப்பானவை. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 7 ஆண்டுகள்.






      Dinamalar
      Follow us