பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகள் லாபம் தருவதற்கு வாய்ப்புள்ளதா?
பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகள் லாபம் தருவதற்கு வாய்ப்புள்ளதா?
UPDATED : பிப் 19, 2026 02:01 AM
ADDED : பிப் 19, 2026 01:49 AM

இந்திய பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், இத்துறை சார்ந்த பங்குகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் பழைய விமானங்களை நீக்கிவிட்டு, புதிய விமானங்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 7 - 8 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 200 போர் விமானங்களும், அடுத்த 12 - 15 ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட விமானங்களும் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிபுணர்களின் கருத்து
போர் விமானங்களுக்கான, 40 - -50 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வாய்ப்புள்ளதால், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனத்துக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது
கடற்படையைப் பலப்படுத்த, அடுத்த 2 ஆண்டுகளில் 1.5 - 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் வரக்கூடும் என்பதால், 'மசாகன் டாக்' மற்றும் 'ஜி.ஆர்.எஸ்.இ.,' ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் பயனடையும். குறிப்பாக 'மசாகன் டாக்' நிறுவனத்தின் ஆர்டர் புக் வலுவாக உள்ளதால், அதன் வருவாய் கணிசமாக உயரும்
ஏவுகணை அமைப்புகள், டிரோன்கள், ராக்கெட் அமைப்புகள் போன்ற துறைகளில், 'சோலார் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் ஆர்டர் வரவு வலுவாக தொடர்கிறது
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பாதுகாப்புத் துறை பங்குகள் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன
பாதுகாப்புத்துறை தொடர்புடைய நிறுவனப் பங்குகள், தற்போது அவற்றின் உண்மையான மதிப்பை விட அதிகமாக வர்த்தகமாகின்றன. எனவே, இந்தப் பிரிவில் முதலீடு செய்யும் போது சற்று நிதானமாகச் செயல் படுவது அவசியம்.

