உள்ளடக்கத்திற்கு செல்ல

‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனம் ரூ.11,700 கோடி திரட்டுகிறது
‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனம் ரூ.11,700 கோடி திரட்டுகிறது
UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:10 PM

அ நிறம் | அளவு
‘ ப ஜாஜ் பைனான்ஸ்’, தனது வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்கில் 11,700 கோடி ரூபாய் மதிப்பில் தகுதியான நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதில், பங்கு ஒன்றுக்கு 992.25 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பஜாஜ் பைனான்ஸ் ஒப்புதல் அளித்த மொத்த 17,500 கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று தாய் நிறுவனமான ‘பஜாஜ் பின்சர்வ்’ நிறுவனத்திற்கு 57.43 மில்லியன் பங்குகள் (ஒவ்வொன்றும் ரூ.1,010 வீதம்) ஒதுக்கப்பட்டு 5,800 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
