தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/மீட்சிக்கு பிறகும் சரிவுப்போக்கே ஆதிக்கம் செலுத்துகிறது

மீட்சிக்கு பிறகும் சரிவுப்போக்கே ஆதிக்கம் செலுத்துகிறது

மீட்சிக்கு பிறகும் சரிவுப்போக்கே ஆதிக்கம் செலுத்துகிறது


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

22,708.80 22,829.75 22,636.85 22,749.75

நிப்டி 44 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து, 1 மணி வரை சிறுசிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து, பின்னர் இறங்க ஆரம்பித்து –116 வரை சென்று மீண்டு நாளின் இறுதியில் 3 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி100’ குறியீடு குறைந்தபட்சமாக 0.22 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி ஸ்மால்கேப்100’ குறியீடு அதிகபட்சமாக 2.69 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும், 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மீடியா’ குறியீடு அதிகபட்சமாக 3.66 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி சிமெண்ட்’ குறியீடு அதிகபட்சமாக 2.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,665 நிறுவனங்களின் பங்குகளில் 2,455 ஏற்றத்துடனும், 1,103 இறக்கத்துடனும், 107 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் பாசிட்டிவ் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (+48.56), சிக்னல் லைனுக்கு (–188.57) மேலே இருக்கும் எம்.ஏ.சி.டி., (–140.00) போன்றவை பியரிஷ் மொமென்டம் சற்று குறைந்திருப்பதை காட்டுகின்றன. ஆர்.ஓ.சி., (12 நாள்) மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் எண்களும் மீட்சிக்கு ஆதரவாக உருவெடுத்துள்ளன. இருப்பினும், ஆர்.எஸ்.ஐ., 46 என்ற அளவில் இருப்பது, சந்தையின் வேகம் இன்னும் நடுநிலையான 50 என்ற அளவுக்குக் கீழே இருப்பதை காட்டுகிறது. அதேபோல், –டி.ஐ., 24.63 என்ற அளவில் இருப்பதும், +டி.ஐ., 13.55 என்ற அளவில் இருப்பதும், சமீபத்திய மீட்சிக்கு பிறகும் சந்தையில் இறக்கப்போக்கே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை காட்டுகிறன.

சந்தையில் நிலவும் போக்கின் வலிமையை காட்டும் ஏ.டி.எக்ஸ்., 35.77 என்ற அளவில் உள்ளது. +டி.ஐ.,யை விட –டி.ஐ., அதிகமாக இருப்பதால், இந்த போக்கு இறக்கத்துக்கு சாதகமாகவே உள்ளது. நிப்டி நிறைவடைந்திருக்கும் 22,749 என்ற அளவானது 9 நாள் சராசரி (இ.எம்.ஏ.,) மற்றும் 20 நாள் சராசரிக்கு (எஸ்.எம்.ஏ.,) மேலேயும், 21 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) கீழேயும் இருக்கிறது. எனவே, தற்போதைய டெக்னிக்கல் சூழல் எச்சரிக்கையுடன் கூடிய நியுட்ரல் முதல் பியரிஷ் அளவிலானதாகவே உள்ளது எனலாம். 22,836க்கு மேலே சென்று நிலைத்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. 22,637க்கு கீழே சென்றால் மீண்டும் இறக்கம் தொடர வாய்ப்புள்ளது.

22648 22546 22472

22841 22932 23005

இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்

நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 27.10.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

பாட்டா இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26): –1.55 ஆர்.ஓ.சி.,: 9.79 ஆர்.எஸ்.ஐ.,: 62.41) 679.00 655 627 719 1, 2, 3, 4, 5

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): –7.23 ஆர்.ஓ.சி.,: 0.18 ஆர்.எஸ்.ஐ.,: 38.47) 367.95 364 360 373 1, 2, 5

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): –9.90 ஆர்.ஓ.சி.,: –5.03 ஆர்.எஸ்.ஐ.,: 43.82) 510.00 500 490 519 1, 4

ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): –20.98 ஆர்.ஓ.சி.,: –0.18 ஆர்.எஸ்.ஐ.,: 52.44) 1,086.00 1,078 1,040 1,111 1, 3

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26): –2.77 ஆர்.ஓ.சி.,: 2.98 ஆர்.எஸ்.ஐ.,: 46.54) 171.20 167 164 174 1, 4

டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு

(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு

(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்

அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us