UPDATED : ஜன 24, 2026 01:31 AM
ADDED : ஜன 24, 2026 01:30 AM

கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு பின், பாதுகாப்பு துறையை அடிப்படையாக கொண்ட மியூச்சுவல் பண்டுகள், 21 சதவீதம் வரை லாபம் வழங்கியுள்ளன.
'மேக் இன் இந்தியா' 'சுயசார்பு இந்தியா' போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம், பாதுகாப்பு துறையின் நவீனமயமாக்கலுக்கான அரசின் செலவுகள் அதிகரிப்பு, உலகளாவிய அரசியல் பதற்றம் போன்ற காரணங்களால் 'டிபென்ஸ்' பண்டுகள் நல்ல லாபம் தந்திருக்கின்றன.
தற்போது பாதுகாப்பு துறையை மையமாக கொண்டு, மொத்தம் 6 மியூச்சுவல் பண்டுகள் உள்ளன. இதில், ஒன்று மட்டும், 'ஆக்டிவ்' முறையில் நிர்வகிக்கப்படுகிறது; மீதமுள்ள ஐந்தும், 'பாசிவ்' பண்டுகளாக உள்ளன.
ஆக்டிவ் முறையில் நிர்வகிக்கப்படும், 'ஹெச்.டி.எப்.சி., டிபென்ஸ்' பண்டு, 12.97 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் அரசின் நீண்டகால திட்டங்கள் தொடரும் நிலையில், குறுகிய கால ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், இந்த துறை முதலீட்டாளர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கும் என, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

