ADDED : அக் 16, 2025 03:29 AM

வெளிநாட்டு காரணிகளால், தற்போது ஏற்பட்டுள்ள பலவீனம், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, அடுத்த தீபாவளி வரையிலான காலகட்டதிற்கான முதலீட்டிற்கு, குறைந்த விலையில், கூடுதல் மதிப்புள்ள பங்குகளை வாங்க நல்ல வாய்ப்பை தருகிறது என்று கூறி, பங்குகளை பரிந்துரை செய்துள்ளது 'எச்.டி.எப்.சி., செக்யூரிட்டிஸ்' நிறுவனம். அவற்றில் சில நிறுவனங்கள்:
பார்தி ஏர்டெல்
சிறப்பம்சம்: துறையிலேயே அதிகமாக சராசரி வாடிக்கையாளர் வருமானம் ரூ.250 ஆக இருப்பது. ரூ.300 ஆக மாறவும் வாய்ப்புள்ளது.
பரிந்துரைக்கும் விலை: ரூ. 1,935 -- 1,985
இலக்கு: ரூ. 2,244
ஹேப்பி போர்ஜிங்ஸ்
சிறப்பம்சம்: 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை பெற்றுள்ளது. அடுத்த 5 - 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது.
பரிந்துரைக்கும் விலை: ரூ. 910- - 944
இலக்கு: ரூ.1,083
ஜே.எஸ்.டபிள்யு., எனர்ஜி
சிறப்பம்சம்: எதிர்கால திட்டத்தின் கீழ், 2030க்குள் மொத்த மின்சார உற்பத்தி திறனை 30 ஜிகா வாட்டாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
பரிந்துரைக்கும் விலை: ரூ.538- - 555
இலக்கு: ரூ.639
ஷீலா போம்
சிறப்பம்சம்: கர்லான் நிறுவனத்தை கையகப் படுத்தியது, இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் வலுவான சந்தை நிலை.
பரிந்துரைக்கும் விலை: ரூ. 678- - 698
இலக்கு: ரூ. 837
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்
சிறப்பம்சம்: சந்தையில் முன்னிலை வகிப்பது, வலுவான பிராண்டு ரீகால் மற்றும் விலை நிர்ணயம் செய்யும் திறன்.
பரிந்துரைக்கும் விலை: ரூ.1,500 -- 1,550
இலக்கு: ரூ. 1,717
லார்சன் அண்டு டூப்ரோ
சிறப்பம்சம்: ரூ.6.10 லட்சம் கோடி வலுவான ஆர்டர் புக், மற்றும் ரூ14.80 லட்சம் கோடி அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு
பரிந்துரைக்கும் விலை: ரூ.3,760 - -3,818
இலக்கு: ரூ. 4,243
இலக்கு என்பது அடுத்த தீபாவளிக்கானதாகும் .