அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:38 PM

கடந்த சில மாதங்களாக இந்திய பங்கு சந்தையிலிருந்து முதலீடுகளை திரும்ப பெற்று வந்த அன்னிய முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்தில் 1.54 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
‘என்.எஸ்.டி.எல்.,’ தரவுகளின்படி, நவம்பர் 2 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் பதிவான இந்த நிகர முதலீடு, இந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச அன்னிய முதலீடாகும்.
முன்னதாக நவம்பர் 2020ல் பதிவான ரூ.60,358 கோடியே அதிகபட்சமாக இருந்தது.
கடந்த செப்டம்பரில் 35,861 கோடி ரூபாயையும், அக்டோபரில் 34,843 கோடி ரூபாயையும் அன்னிய முதலீட்டாளர் வெளியேற்றியிருந்தனர்.
மார்ச் மாதத்தில் மட்டும் 1.17 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியது. ஆனால், நவம்பர் மாதத்தின் இந்த ஒரே மாத முதலீட்டால், கடந்த 10 மாதங்களில் வெளியேறிய தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் மீண்டும் இந்திய சந்தைக்கு திரும்பியுள்ளது. 2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த அன்னிய முதலீடு வெளியேற்றம் சில வாரங்களுக்கு முன்பு மூன்று லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1.41 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
