ADDED : அக் 16, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிசர்வ் வங்கியால், கடந்த 2017 -- 18ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட மூன்றாவது கட்ட தங்க பத்திரக் கணக்கு முதிர்வடைந்துள்ள நிலையில், யூனிட் ஒன்றுக்கு 12,567 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 338 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2017ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களை, நேற்று முதல் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி ஒரு கிராம் தங்கத்துக்கு 9,701 ரூபாய் லாபம் கிடைக்கிறது. கடந்த 13, 14, 15 ஆகிய தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையைக் கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டின் போது
ரூ. 2,866