தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தங்கம் விலை 9 சதவீதம் உயர்வு

 தங்கம் விலை 9 சதவீதம் உயர்வு

 தங்கம் விலை 9 சதவீதம் உயர்வு


ADDED : ஆக 16, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 03:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க பொருளாதார தரவுகள் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை உடனடியாக உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு சதவீதம் வரை உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 4,397 டாலராக விற்பனையானது. முன்னதாக, 10 வாரங்களில் இல்லாத உயர்வாக 4,450 டாலரை தொட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க தரவுகள் தொடர்ந்து தளர்வடையும் வரை, பாதுகாப்பு சார்ந்த முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் தொடரும் என்றும்; இதன் காரணமாக விலை ஏற்றம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய காரணங்கள்

* அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 3.5 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாக குறைந்திருப்பது

* அமெரிக்க டாலர் குறியீடு 99.60க்கு கீழே சரிந்திருப்பது

* ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படாதது

* ஈரானுக்கு எதிரான தடைகள் குறித்து அமெரிக்கா அளித்து வரும் எச்சரிக்கைகள்

* கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அது மீண்டும் பணவீக்கத்தை உயர்த்துமோ என்ற கவலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us