தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஜூன் 22, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டவுனு: வாங்க அப்பு, நியுட்ரன். ஏன் இரண்டு பேரும் லேட்டா வர்றீங்க?

அப்பு: இனிமே நாங்க அப்படித்தான்.

டவுனு: ஓ! நாலு நாள் உங்க கை ஓங்கியிருந்ததாலே கெத்தா நடந்துக்கிறீங்களாக்கும்..

நியுட்ரன்: ஒரே வாரத்துல நிப்டியில 371 புள்ளிகள் ஏத்தியிருக்கோம்.

டவுனு: யார் எதை பேசுறதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா. முந்துன வாரம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 461 புள்ளிகள் ஏத்துனீங்க. இந்த வாரம் பூரா 371 புள்ளிகள் ஏத்தியிருக்கீங்க. இதுல கெத்து வேற!

நியுட்ரன்: போன வெள்ளிக் கிழமைதான் உங்க வேலையை காட்டீட்டீங்களே!

அப்பு: கெத்தெல்லாம் ஒன்னும் இல்லீங்க. புறப்படறப்ப ஹைதராபாத் நண்பர் வந்துட்டார். அவரிடம் கொஞ்சம் பேசிட்டு கிளம்பினேன். பேமஸான ஹைதராபாத் பேப்பர் ஸ்வீட் வாங்கீட்டு வந்தார். எடுத்துக்குங்க.



நியுட்ரன்: பேப்பரை எப்படி சாப்பிடறதுன்னு அவரிடம் கேட்டு ரொம்ப ஷேம் ஆயிடுச்சு. அது அரிசியில செஞ்ச பேப்பராம்!

டவுனு: அசிங்கப்படறது நியுட்ரனுக்கு புதுசா என்ன? எதாவது அடிப்படை கேள்வியை கேட்டு அசிங்கப்படறது நமக்கு பழக்கப்பட்டதுதானே!

நியுட்ரன்: சின்ன கேப் கிடைச்சா கோல் போட்டுருவீங்களே. வர்ற வாரத்துல இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், ஹெச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங்/ சர்விசஸ் பி.எம்.ஐ., வங்கிகளில் உள்ள டிப்பாசிட் / வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகளும், எஸ் அண்டு பி குளோபல் மேனுபேக்சரிங்/சர்விசஸ் பி.எம்.ஐ., பு திய வீடுகள் விற்பனை, டியூரபிள் கூட்ஸ் ஆர்டர்கள், தனிநபர் வருமானம் / செலவுகள், மிச்சிகன் கன்ஸ்யுமர் சென்டிமெண்ட் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்குது.

அப்பு: வர்ற வெள்ளிக்கிழமை சந்தை விடுமுறையும் இருக்குது.

நியுட்ரன்: 23,824/23,635/23,493-ல வாராந்திர அளவிலான சப்போர்ட்டும் 24,196/24,378/24,520-ல வாராந்திர அளவிலான ரெசிஸ் டென்ஸும் இருக்குது.

அப்பு: ஏங்க டவுனு மறுபடியும் உங்க இராஜ்ஜியம் வந்துடுமோ!

டவுனு: ஓப்பனிங்கில கெத்து காட்டுனீங்க.

நியுட்ரன்: முடிஞ்சுதுன்னு நினைச்சா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்களே அதனாலதான்.

அப்பு: அதனாலதான் உள்ளுக்குள்ள இருக்குற உதறல் தெரிஞ்சுடக்கூடாதுன்னு வெளியில கெத்தா இருக்கற மாதிரி காட்டிக்கிறோம். வர்ற வாரம் எப்படி இருக்க வாய்ப்பிருக்கு டவுனு.



டவுனு: போன வாரம் வாராந்திர ரீதியா 390 புள்ளிகள் ஏற்றம் வந்திருந்தாலும் வார இறுதியில் முக்கியமான சைக்காலஜிக்கல் லெவலான 24,000-க்கு கிட்ட வந்து நிப்டி நிறைவடைஞ்சிருக்கு. வார இறுதியில் வந்த செய்திகளை பார்த்தால், இந்த லெவலை உடைச்சு கீழே போக வாய்ப்பிருக்கிற மாதிரிதான் இருக்குது. 23,900-த்தை சட்டுன்னு கடந்துட்டா அப்புறம் எங்களுக்கு கொஞ்சம் ஸ்கோப் கிடைக்கும்.

அப்பு: அப்ப நான் நாலு நாள் லீவு எடுத்துட்டு ஒரு டூர் போயிட்டுவரட்டா?

நியுட்ரன்: அது என்னோட வேலை. நீங்க செய்யப்படாது.

டவுனு: அதுக்கு தேவை இருக்காது. மாத இறுதியா இருக்கறதால வாரக்கடைசியில நிலைமை டக்குன்னு உங்களுக்கு சாதகமா மாறிடவும் வாய்ப்பிருக்கு.

நியுட்ரன்: தயவு செய்து கொஞ்ச நாள் அமைதியா இருங்க டவுனு. நான் கொஞ்சம் வியாபாரம் பண்ணிக்கிறேன்.

டவுனு: தயவு செய்துன்னெல்லாம் சொல்லாதீங்க நியுட்ரன். உங்க பவர் உங்களுக்கு தெரியல. உங்க கையில சந்தை வந்தா நாங்க இரண்டு பேரும் கதறிடுவோம். அதுதான் நிஜம்.

நியுட்ரன்: என்ன பவரோ. எனக்கு புரியல.

டவுனு: ஸ்வீட் நல்லா இருக்குதுங்க. அடுத்த முறை வர்றப்ப எனக்கு தனியா ஒரு பாக்கெட் வாங்கீட்டு வர சொல்லுங்க.

அப்பு: ஓ யெஸ்.

டவுனு: ஸ்வீட் சாப்பிட்டு காரம், காபி சாப்பிடாட்டா எப்படி. நியுட்ரன் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று டவுனு சொல்ல மூவரும் ரெஸ்ட்டாரெண்ட்டை நோக்கி கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us