தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இன்சூரன்ஸ் இ.டி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ., புரூ., அறிமுகம்

 இன்சூரன்ஸ் இ.டி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ., புரூ., அறிமுகம்

 இன்சூரன்ஸ் இ.டி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ., புரூ., அறிமுகம்


ADDED : ஜூலை 22, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய காப்பீட்டு துறையின் வளர்ச்சியை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், 'ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் 'ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் பி.எஸ்.இ., இன்சூரன்ஸ் இ.டி.எப்.,' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், எந்தவொரு தனிப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் பங்கும் 25 சதவீதத்திற்கு மேல் இருக்காத வகையில், பி.எஸ்.இ., 1,000 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களை உள்ளடக்கியே இந்த குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்) இந்த குறியீடு மறுசீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் 17 சதவீத கூட்டு வளர்ச்சியை கண்டுள்ள இத்துறையில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்தி உள்ளது. உலகளாவிய சராசரியை விட இந்தியாவில் ஊடுருவல் குறைவாக இருப்பதும், '2047க்குள் அனைவருக்கும் காப்பீடு' என்ற இலக்கும் இத்துறைக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. மேலும், தற்போதைய சந்தையில் இக்குறியீட்டின் மதிப்பீடு அதன் ஐந்து ஆண்டு வரலாற்று சராசரியை விட குறைவாகவே வர்த்தகமாகிறது.

முக்கிய விபரங்கள்

* என்.எப்.ஓ., காலம்: ஜூலை 28ம் தேதி வரை

* கு றைந்தபட்ச முதலீடு: ரூ.1,000 ரூபாய்,

* வெளியேற்ற கட்டணம்: இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us