ஐ.பி.ஓ., : 'எக்ஸெல்சாப்ட்' முதல் நாளில் 12.50% உயர்வு
ஐ.பி.ஓ., : 'எக்ஸெல்சாப்ட்' முதல் நாளில் 12.50% உயர்வு
ADDED : நவ 27, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எக்ஸெல்சாப்ட்' முதல் நாளில் 12.50% உயர்வு
'எ க்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்' நிறுவன பங்குகள், நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், 12.50 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலை 120 ரூபாயாக இருந்த நிலையில், இரு சந்தைகளிலும் 135 ரூபாய்க்கு பட்டியலானது.
வர்த்தக நேர முடிவில், ஒரு பங்கின் விலை 5.08 சதவீதம் உயர்ந்து 126.10 ரூபாய்க்கு முடிந்தது. 500 கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்குடன் ஐ.பி.ஓ., வெளியிட்ட இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, 43.19 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

