உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 17, 2026 03:17 AM

அ நிறம் | அளவு
மஹாநதி கோல்பீல்ட்ஸ்
பங்கு விலை ரூ.129 – 136
‘ம ஹாநதி கோல்பீல்ட்ஸ்’ நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வரும் நவம்பர் 19ம் தேதி தொடங்கி, 23ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், ஒரு பங்குக்கான விலை வரம்பு 129 ரூபாய் முதல் 136 ரூபாய் வரை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் 8,981 கோடி ரூபாய்க்கு பங்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
‘ரெடிப்.காம் இந்தியா’
புதிய விண்ணப்பம்
பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கி வரும் ‘ரெடிப்.காம் இந்தியா’ நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட விண்ணப்பத்தை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இந்நிறுவனம் 600 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாகவே, கடந்த மார்ச் மாதத்தில் செபியிடம் ரகசிய முறையில் ஐ.பி.ஓ., விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தது.
