தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஆயுள் காப்பீடு: புதிய பாலிசிகள் குறைவு பிரீமியம் வசூல் வளர்ச்சி

ஆயுள் காப்பீடு: புதிய பாலிசிகள் குறைவு பிரீமியம் வசூல் வளர்ச்சி

ஆயுள் காப்பீடு: புதிய பாலிசிகள் குறைவு பிரீமியம் வசூல் வளர்ச்சி


ADDED : ஜன 25, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு துறையில், 2024 - 25ம் நிதியாண்டில் புதிய பாலிசி விற்பனையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிரீமியம் வசூல் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 2.90 கோடி புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்பட்ட நிலையில், 2024 - 25ல், 2.70 கோடியாக குறைந்துள்ளது. ஐ.ஆர்.டி.ஏ., தரவுகளின்படி, 2019 - 20 முதல் 2024 - 25 வரை, புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசிகளிலிருந்து பெறப்பட்ட பிரீமியம், 53 சதவீதம் உயர்ந்து, 2.59 கோடி ரூபாயில் இருந்து 3.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

புதுப்பிப்பு பிரீமியத்தையும் சேர்த்து மொத்த பிரீமியம் வருமானம், இதே காலகட்டத்தில் 45 சதவீதம் உயர்ந்து, 5.72 கோடி ரூபாயில் இருந்து 8.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டுகள், இ.டி.எப்., கடன் பத்திரங்கள் மற்றும் என்.பி.எஸ்., போன்ற முதலீடுகள், மக்களின் சேமிப்புகளை காப்பீடுகளில் இருந்து திசைமாற்றி வருகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us