
மேட்ரிமோனி.காம்
'மே ட்ரிமோனி.காம்' நிறுவனம், டிசம்பர் 15ம் தேதி பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை பரிசீலிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 12 சதவீதம் வரை உயர்ந்தன. இந்நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பது மூன்றாவது முறையாகும்.
லென்ஸ்கார்ட்
'லெ ன்ஸ்கார்ட் ' நிறுவன பங்குகளை, பங்குதாரர்கள் விற்பதற்கான ஒரு மாத லாக்-இன் காலம் முடிந்ததால், 1,700 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதி பெற்றன. இதனால், இந்நிறுவன பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் இடையே 3 சதவீதம் வரை சரிந்தன.
ஓலா எலெக்ட்ரிக்
'ஓ லா எலெக்ட்ரிக் மொபைலிட்டி' நிறுவன பங்குகள், தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவைச் சந்தித்த நிலையில், நேற்று 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. பட்டியலிடப்பட்ட விலைக்கு பின் சென்ற அதிகபட்ச விலையில் இருந்து இந்நிறுவன பங்குகள் கிட்டதட்ட 80 சதவீதம் சரிந்துள்ளன.
வைஸ்
'வை ஸ்' நிறுவனம் நம் நாட்டில் தனது மல்டி கரன்சி பயண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பயணம் அதிகமுள்ள இந்த காலகட்டத்தில், இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டணங்கள் வெளிப்படையானதாக இருக்கும் என இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஐனாக்ஸ் க்ளீன் எனர்ஜி
'ஐ னாக்ஸ் க்ளீன் எனர்ஜி' ஐ.பி.ஓ.,வுக்கு முந்தைய நிதியுதவி வாயிலாக 5,000 கோடி ரூபாய் திரட்டியதால், நிறுவனம் தனது ஆரம்ப ஐ.பி.ஓ., வரைவு ஆவணங்களை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது. புதிய நிதி விவரங்களைச் சேர்த்த பிறகு மீண்டும் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ள தாக தெரிவித்து உள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
த னது போட்டியாளரான 'இண்டிகோ'வில் ஏற்பட்ட செயல்பாட்டுக் குறைபாடுகள் காரணமாக, 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவன சேவைகளுக்கான தேவை அதிகரித்தது. இதனால், இந்நிறுவனத்தின் பங்குகள் இரண்டாவது நாளாக 13 சதவீதம் வரை உயர்ந்தன.

