ADDED : நவ 27, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க மாடிட்டி சந்தையான எம்.சி.எக்ஸ்., நிறுவன பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் இடையே முதன் முறையாக 10,000 ரூபாயை தாண்டியது. கடந்த மார்ச் மாதம் இந்நிறுவன பங்குகளின் விலை 4,408 ரூபாய் என்ற மிக குறைந்த அளவை தொட்ட நிலையில், நேற்று தேசிய பங்கு சந்தையின் வர்த்தக முடிவில் 4.49 சதவீதம் அதிகரித்து, 10,310 ரூபாயாக உயர்ந்தது.
இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 52,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் முன்பேர வர்த்தகமும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

