ADDED : நவ 11, 2025 01:30 AM

எம்.வீ., போட்டோவோல்டாயிக் பவர் லிமிடெட் நிறுவனம், ஒருங்கிணைந்த சோலார் போட்டோவோல்ட்டிக் மாட்யூல்களை உற்பத்தி செய்யும் வசதிகளை கர்நாடகாவில் கொண்டுள்ளது. 2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் சோலார் பி.வி., மாட்யூல்கள் மற்றும் சோலார் செல்களை தயாரிக்கிறது.
வெளியிடும் முறை ரூ.(கோடிகளில்)
புதிய பங்கு வெளியீடு
2,146.86
ஆபர் பார்
சேல்
756.14
திரட்டப்படும்
மொத்த மதிப்பு
2,900.00
ஐ.பி.ஓ.,
ஆரம்ப தேதி : 11.11.2025
கடைசி தேதி : 13.11.2025
முக மதிப்பு : ரூ.2.00
விலை வரம்பு : ரூ.206 -- 217 வரை
விண்ணப்ப விபரம்
குறைந்தபட்ச அளவு : 69 பங்குகள்
குறைந்தபட்ச தொகை : ரூ.14,973
பட்டியலிடப்படும் பங்குச் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,
நாள்: 18.11.2025 (எதிர்பார்ப்பு)
சிறப்பம்சங்கள்
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்படும் இந்நிறுவனம், சூரியசக்தி பேனல்கள், செல்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பது
* 6.60 ஜிகா வாட் மாட்யூல்கள், 2.50 ஜிகா வாட் செல்களை உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு வசதியை கொண்டிருப்பது
* சோலார் பி.வி., செல்களின் செயல்திறனை சோதனை செய்யும் நிபுணத்துவ அமைப்பின் சோதனைகளில் தேர்ச்சி
* ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் செய்து வருவது
* என்.டி.பி.சி., மற்றும் கே.பி.ஐ., க்ரீன் எனர்ஜி போன்ற நிறுவனங்களுடன் சமீபத்தில் இணைந்து செயல்பட
துவங்கியிருப்பது.
ரிஸ்க்குகள்
* அரசுகளின் கொள்கை முடிவுகளை சார்ந்து செயல்பட வேண்டியிருப்பது
* வளர்ந்து வரும் தேவைக்கேற்ப உற்பத்தி விரிவாக்கம் மேற்கொள்வதில் எதிர்க்கொள்ளக்கூடிய
சிக்கல்கள்
* மூலப்பொருட்களின் விலை அடிக்கடி மாறும்தன்மை
கொண்டிருப்பது
* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் கடுமையான போட்டி
* பல்வேறு நாடுகளில் உள்ள சட்டதிட்டங்களை கடைப்பிடிப்பதில் வரக்கூடிய சிக்கல்கள்
* புவிசார் அரசியல் பதற்றங்களால் அடையக்கூடிய பாதிப்பு
* குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையே சார்ந்து செயல்படுதல்.

