ADDED : நவ 29, 2025 02:32 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 26,237.45 26,280.75 26,172.40 26,202.95
நிப்டி பேங்க் 59,758.70 59,897.50 59,598.95 59,752.70
நிப்டி
நாளின் ஆரம்பத்தில் ஓரளவு ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, சிறிய
இறக்கங்களை சந்தித்து, பின் ஏற்றமடைந்து, மதியத்திற்கு மேல்
இறங்கி, நாளின் இறுதியில் 12 புள்ளிகள் இறக்கத்துடன்
நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், அனைத்துமே
இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு
குறைந்தபட்சமாக 0.02 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்
100' குறியீடு அதிகபட்சமாக 0.27 சதவீத இறக்கத்துடனும்
நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 11
குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும்
நிறைவடைந்தன. இதில் 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 0.62
சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு
குறைந்தபட்சமாக 0.09 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.69 சதவீத
இறக்கத்துடன் நிறைவடைந்தது.
வர்த்தகம் நடந்த 3,187
பங்குகளில் 1,527 ஏற்றத்துடனும்; 1,555 இறக்கத்துடனும், 105
மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி தற்போதைய
குறுகிய கால தடுப்பான 26,200-ல் நிறைவடைந்துள்ளது. சிறிதளவு 'ஓவர்
பாட்' ஆக இருப்பதால், இந்த இடத்தில் கன்சாலிடேஷன் நடக்க
வாய்ப்புள்ளது. 26,000-த்திற்கு கீழே போகாதவரையில், பெரிய அளவிலான
இறக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே.
செய்திகள் ஆதரவாக இருந்தால் மட்டுமே மேல் நோக்கிய
பயணம் தொடர வாய்ப்புள்ளது.
ஆதரவு 29,145 26,105 26,060
தடுப்பு 26,260 26,315 26,360
நிப்டி பேங்க்
காலை
10.30 மணி வரையில் இறக்கத்தை சந்தித்து மீண்டுகொண்டிருந்த நிப்டி
பேங்க், அதன் பின் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 15 புள்ளிகள்
ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பெரிய அளவிலான இறக்கத்திற்கு
வாய்ப்பில்லை என்று டெக்னிக்கல்கள் காட்டுகிற போதிலும்; நாளின்
இடையே அவ்வப்போது இறக்கங்கள் வந்து போகலாம். 59,500-க்கு கீழே
செல்லாதவரையில், பெரிய
அளவிலான இறக்கம் காண்பதற்கான வாய்ப்புகள் குறைவே.
ஆதரவு 59,600 59,445 59,330
தடுப்பு 59,890 60,040 60,155

