என்.பி.எஸ்., அடல் பென்ஷன் ரூ.16 லட்சம் கோடி திரண்டது
என்.பி.எஸ்., அடல் பென்ஷன் ரூ.16 லட்சம் கோடி திரண்டது
ADDED : அக் 11, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தே சிய ஓய்வூதிய திட்டமான என்.பி.எஸ்., மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஏ.பி.ஒய்., திட்டங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு, 16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அடல் பென்ஷன் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில், மொத்தம் ஒன்பது கோடி பேருக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர்.
என்.பி.எஸ்., திட்டத்தை வலிமைப்படுத்தவும், கூடுதல் உறுப்பினர்களை சேர்க்கவும் பல்வேறு முயற்சிகளை ஆணையம் அறிமுகம் செய்து வருகிறது. அத்துடன் ஓய்வூதிய நிதியில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.