ADDED : அக் 24, 2025 11:16 PM

தேசிய பங்கு சந்தை, அதன் 'என்.எஸ்.இ., மியூச்சுவல் பண்டு இன்வெஸ்ட்' தளத்தில், நான்கு புதிய மொபைல் சேவைகளையும் கூடவே மேலும் சில முக்கிய மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
1. இன்வெஸ்ட்டார் ஆப்: தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில், தரம் உயர்த்தப்பட்ட சேவைகளை பெறலாம். முதலீட்டாளர்கள் பல கணக்குகளை இணைத்து, தங்களது போர்ட்போலியோவை ஒரே இடத்தில் அணுகலாம்
2. வாட்ஸாப் சாட்பாட்: இதன் வாயிலாக சந்தை விலை, புள்ளிவிவரங்கள் மற்றும் சமீபத்திய பங்குச் செய்திகளை எளிதாக பெறலாம்.
3. மெம்பர் போர்ட்டல் ஆப்: வர்த்தக உறுப்பினர்களுக்கு, அபராத விவரங்கள் மற்றும் சுற்றறிக்கைகளை மொபைல் வழியாக பார்க்கும் வசதி.
4. என்.இ.ஏ.பி.எஸ்., ஆப்: நிறுவனங்களுக்கென அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிறுவனங்களுக்கான பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள், வர்த்தக உறுப்பினர்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இடையே எளிய தொடர்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இந்த அறிமுகங்கள் உறுதி செய்யும் என என்.எஸ்.இ.,யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

