ADDED : நவ 28, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
' ஒ ன்97 கம்யூனி கேஷன்ஸ்' துணை நிறுவனமான பே.டிஎம்., பேமென்ட்ஸ் சர்வீசஸ், வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான 'பேமெட்ன்ட் அக்ரிகேட்டர்' ஆக செயல்படுவதற்கான இறுதி அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெற்றுள்ளது.
இந்நிறுவனம் புதிய வணிகர்களை சேர்ப்பதற்கு, ரிசர்வ் வங்கி கடந்த 2022 நவம்பரில் தடை விதித்திருந்தது. அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அன்னிய நேரடி முதலீட்டு விதிகள் தொடர்பான சில சிக்கல்கள் காரணமாக, இந்நிறுவனத்தின் விண்ணப்பம் கடந்த 2022ல் நிராகரிக்கப்பட்டு, பின்னர் திருத்தப்பட்ட விண்ணப்பம் கோரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

