ADDED : நவ 28, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வே ர்ல்பூல் அப் இந்தியா' நிறுவனத்தின் பங்கு விலை, நேற்று வர்த்தக நேரத்தின் இடையே 12 சதவீதம் வரை சரிந்தது. இதன் தாய் நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த 'வேர்ல்பூல் கார்ப்பரேஷன்' கிட்டத்தட்ட 11.80 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பங்கு ஒன்றின் விலை 1,030 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 965 கோடி ரூபாய்க்கு இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில், நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவைக் கண்டது. வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் விலை 11.54 சதவீதம் சரிந்து, 1,062 ரூபாயாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வேர்ல்பூல் ஆப் இந்தியா நிறுவனர்கள் தங்களது பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

