உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பங்குகளாக மாற்ற முடியாத ‘என்.சி.டி.,’ பத்திரங்களை வெளியிடுவதன் வாயிலாக 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்கு நிறுவனத்தின் நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இப்பத்திரங்களை ஒரு தொகுப்பாகவோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளாகவோ வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டிலும் இந்நிறுவனம் என்.சி.டி., பத்திரங்களை வெளியிட்டு கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாய் திரட்டியது, நினைவிருக்கக் கூடும்.
