ADDED : செப் 23, 2025 12:37 AM

டிரம்ப் நிர்வாகம் திடீரென 'எச்-1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியதால், இந்திய ரூபாயின் மதிப்பு 88.30-ஐ மீண்டும் தொட்டது. இந்த கட்டண உயர்வு, இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு பெரிய செலவு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இது, நிறுவனங்களின் லாபத்தையும், இந்தியாவின் சேவை ஏற்றுமதியையும் பாதிக்கலாம். இதனால், இந்திய ஐ.டி., துறை பங்குகளில் இருந்து முதலீடுகள் வெளியேறவும், ரூபாயின் மதிப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.
இந்த எதிர்மறை தாக்கங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி அறிவித்த புதிய ஜி.எஸ்.டி., விகிதங்கள், ரூபாய்க்கு ஆதரவாக உள்ளன.
மேலும், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த வாஷிங்டன் சென்றுள்ளார். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தி, ரூபாயின் மதிப்பு உயர உதவக்கூடும்.
தற்போதைய நிலையில், உள்நாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் சாதகமான வர்த்தக சூழல் காரணமாக, ரூபாய் சற்று ஸ்திரமடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.70-க்கு கீழ் சென்றால், மேலும் உயர்ந்து 87.50 அல்லது 87.20-ஐ அடைய வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், 88.40 ஒரு முக்கிய தடை நிலையாக உள்ளது. புதிய காரணிகள் இல்லாமல் இந்த நிலையை தாண்டி ரூபாய் மதிப்பு உயராது.