ADDED : ஜூலை 13, 2026 01:19 AM

'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனம், தன் ஐ.பி.ஓ., வெளியீட்டின் அளவை 9,812.90 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. முன்பு 20.37 கோடி பங்குகளை ஓ.எப்.எஸ்., முறையில் 11,692.90 கோடி ரூபாய்க்கு வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், ஐ.பி.ஓ.,வுக்கு முன் நடைபெற்ற வெளியீட்டில், 3.27 கோடி பங்குகள், ஒரு பங்கு 574 ரூபாய் என்ற விலையில் முன்னணி முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதன் வாயிலாக 1,880 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், 'பி.ஐ., ஆப்பர்சுனிட்டீஸ் பண்டு, ஆகாஷ் மானெக் பன்சாலி, 3பி இந்தியா ஈக்விட்டி பண்டு, ஒயிட்ஓக் கேபிட்டல், டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ், ஹாரா குளோபல் கேபிட்டல் மாஸ்டர் பண்டு, கிளாரஸ் கேபிட்டல், மலபார் இந்தியா பண்டு, 360 ஒன், டைமன் ஏசியா, பென்னட் கோல்மேன்' உள்ளிட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஐ.பி.ஓ.,வின் அளவு 20.37 கோடி பங்குகளில் இருந்து 17.09 கோடி பங்குகளாக (9,812.90 கோடி ரூபாய்) குறைக்கப்பட்டுள்ளது. இதில், எஸ்.பி.ஐ., 9.95 கோடி பங்குகளையும், அமுண்டி நிறுவனம் 7.14 கோடி பங்குகளையும் விற்பனை செய்கின்றன.
