நிலக்கரி எக்ஸ்சேஞ்ச் துவங்க எம்.சி.எக்ஸ்.,க்கு செபி ஒப்புதல்
நிலக்கரி எக்ஸ்சேஞ்ச் துவங்க எம்.சி.எக்ஸ்.,க்கு செபி ஒப்புதல்
ADDED : ஏப் 21, 2026 12:34 AM

நி லக்கரி எக்ஸ்சேஞ் துவங்க செபியிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக, எம்.சி.எக்ஸ்., சந்தை தெரிவித்துள்ளது.
'எம்.சி.எக்ஸ்., கோல் எக்ஸ்சேஞ்ச் அல்லது எம்.சி.எக்ஸ்., கோல் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா' என்ற பெயரில், ஒரு துணை நிறுவனமாக இது துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்துக்காக, 100 கோடி ரூபாய் மூலதனத்தை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொடக்கத்தில், 100 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் தன்வசம் வைத்திருக்கும் என்றும் பின்னர் கூட்டாளிகளை இணைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
நிலக்கரி விற்பனை மற்றும் வாங்குதலில் வெளிப்படையான டிஜிட்டல் தளத்தை உருவாக்குவது மற்றும் சந்தை விலையிலேயே நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வதே இந்நிறுவனம் தொடங்குவதற்கான நோக்கம் என தெரிவித்துள்ள எம்.சி.எக்ஸ்., இதற்காக நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பிடம் முறையாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளதாக கூறியுள்ளது.
கடந்த வாரம் 'நேஷனல் கோல் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா' நிறுவனத்தில் முதலீடு செய்ய என்.எஸ்.இ.,க்கு செபி ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
