கார்ப்பரேட் பாண்டுக்கு தனி குறியீடு ரிசர்வ் வங்கியுடன் செபி பேச்சு
கார்ப்பரேட் பாண்டுக்கு தனி குறியீடு ரிசர்வ் வங்கியுடன் செபி பேச்சு
ADDED : செப் 19, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:கடன் பத்திர சந்தையில், சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், 'கார்ப்பரேட் பாண்டு டெரிவேடிவ் இண்டெக்ஸ்' என்ற, புதிய குறியீட்டை ஏற்படுத்த, செபி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ரிசர்வ் வங்கியுடன், செபி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் பாண்டு குறியீட்டின் வாயிலாக, உள்நாட்டு கடன் பத்திர சந்தையை வலுப்படுத்த இயலும் என, செபி முழுநேர உறுப்பினரான ஆனந்த் நாராயண் தெரிவித்தார்.
செகண்டரி பாண்டு சந்தையின் மதிப்பு, தற்போது ஒரு மாதத்துக்கு 1.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, பங்குகள் வணிகத்தில் ஒரே நாளில் இந்த தொகை வர்த்தகமாகிறது குறிப்பிடத்தக்கது.