உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:25 PM

அ நிறம் | அளவு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான ‘டிஜிட்டல் கே.ஒய்.சி.,’ விதிகள், வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் தளர்த்தப்படும் என்று செபி அறிவித்துள்ளது.
இதன்படி, என்.ஆர்.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., நபர்களும், வெளிநாட்டு குடிமக்களும் முழுமையாக டிஜிட்டல் முறையில் கே.ஒய்.சி.,யை பதிவு செய்யலாம். இது ‘எப்.ஏ.டி.எப்.,’ விதிமுறைகளை பின்பற்றும் நாடுகளில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த புதிய நடைமுறை, இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பதை எளிமையாகவும், விரைவாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
