UPDATED : டிச 11, 2025 01:58 AM
ADDED : டிச 11, 2025 01:54 AM

.
சர்வதேச சந்தையில், வெள்ளி விலை இதுவரை இல்லாத ஏற்றம் கண்ட நிலையில், இந்தியாவில் எம்.சி.எக்ஸ்., சந்தையிலும் அதன் விலை சாதனை அளவை தொட்டது.
உலகளவிலான அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்குவது மற்றும் இ.டி.எப்., பண்டுகள் அதிகளவில் முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்த ஆண்டில் அதிகளவு ஏற்றம் கண்டுள்ளன.
இந்நிலையில், தொழில் துறையில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நம் நாட்டில் அதிகளவில் வெள்ளி வாங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
நடப்பாண்டின் இறுதிக்குள், கமாடிட்டி சந்தையில், வெள்ளி ஒரு கிலோ 2.10 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி விலை ஏறும்போது லாபத்தை பதிவு செய்வது நடந்தாலும், அதன் ஒட்டுமொத்த போக்கு சாதகமாகவே இருப்பதாகவும் கூறுகின்றனர்.
நடப்பாண்டின் இறுதிக்குள், கமாடிட்டி சந்தையில், வெள்ளி ஒரு கிலோ 2.10 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

