காலாவதியான எல்.ஐ.சி., பாலிசிக்கு உயிர் கொடுக்க சிறப்பு திட்டம்
காலாவதியான எல்.ஐ.சி., பாலிசிக்கு உயிர் கொடுக்க சிறப்பு திட்டம்
ADDED : ஜன 04, 2026 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்வேறு காரணங்களால் பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்து கொள்ள, எல்.ஐ.சி., சிறப்பு முகாமை துவங்கியுள்ளது.
முதல் தவணை பிரீமியம் செலுத்த தவறிய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம். பாலிசி காலம் முடிவடையாத பாலிசிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
பாலிசிகளை புதுப்பிக்கும்போது, தாமதமாக செலுத்த வேண்டிய கட்டணத்தில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த சிறப்பு திட்டம், நடப்பாண்டின் ஜனவரி 1ம் தேதி துவங்கிய நிலையில், வரும் மார்ச் மாதம் 2ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

