சூரியகாந்தி எண்ணெய் வர்த்தகம்: 'எம்.சி.எக்ஸ்.,' அறிமுகம்
சூரியகாந்தி எண்ணெய் வர்த்தகம்: 'எம்.சி.எக்ஸ்.,' அறிமுகம்
ADDED : ஆக 17, 2026 03:12 AM

கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான, 'பியூச்சர்ஸ்' வர்த்தகம் 'எம்.சி.எக்ஸ்.,' சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதற்கு பணத்திலேயே 'செட்டில்மென்ட்' நடைபெறும். மேலும், இதன் விலையானது மும்பை 'ஜே.என்.பி.டி.,' துறைமுகத்தில் உள்ள கச்சா சூரியகாந்தி எண்ணெயின் அடிப்படை விலையை வைத்தே நிர்ணயிக்கப்படும்.
இதன் வாயிலாக, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் ரிஸ்க்கை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை விபரங்கள்
*நாட்டில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் கச்சா சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது
* இதில் தோராயமாக 28 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி வாயிலாகவே பெறப்படுகிறது
*நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் பயன்பாட்டில், சூரியகாந்தி எண்ணெய்க்கு கிட்டத்தட்ட 9 சதவீத பங்கு உள்ளது.
