உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 10:02 PM

அ நிறம் | அளவு
தைவான் பங்கு சந்தையில் நிலவி வரும் கடுமையான ஏற்ற இறக்கங்கள் மற்றும் சரிவை கட்டுப்படுத்தும் நோக்கில், பங்குகளை ‘ஷார்ட் செல்லிங்’ செய்வதற்கு தைவான் நிதி மேற்பார்வை ஆணையம் (எப்.எஸ்.சி.,) தடை விதித்துள்ளது.
சந்தையின் ஒழுங்கு மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாக, முந்தைய வர்த்தக நாளின் இறுதி விலைக்கு கீழ் பங்குகளை 'ஷார்ட் செல்' செய்ய அனுமதிக்கப்படாது என ஆணையம் அறிவித்துள்ளது. பங்குகளின் விலை குறையும் என எதிர்பார்க்கும் வர்த்தகர்கள், தங்களிடம் இல்லாத பங்குகளை கடனாக பெற்று அதிக விலைக்கு விற்றுவிட்டு, விலை குறைந்த பிறகு மீண்டும் வாங்கி திருப்பி கொடுப்பதே 'ஷார்ட் செல்லிங்' ஆகும்.
