ADDED : மே 21, 2026 12:47 AM

டாடா ஏ.ஐ.ஏ., நிறுவனத்தின் பென்ஷன் பண்டு அறிமுகம்
'டா டா ஏ.ஐ.ஏ., லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், 'டாடா ஏ.ஐ.ஏ., டிவிடெண்டு லீடர்ஸ் இண்டெக்ஸ் பென்ஷன் பண்டு' என்ற புதிய யூலிப் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நோக்கம்: 'பி.எஸ்.இ., 500 டிவிடெண்டு லீடர்ஸ் 50' குறியீட்டை பின்பற்றி, தொடர்ந்து டிவிடெண்டு வழங்கும் 50 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, நீண்டகால ஓய்வூதிய சேமிப்பை உருவாக்குவது.
என்.எப்.ஓ., தொடக்கம் : மே 20, 2026என்.எப்.ஓ., முடிவு : மே 27, 2026
மீண்டும் முதலீடுகளை ஏற்கும் 'பி.ஜி.ஐ.எம்., மியூச்சுவல் பண்டு'
க டந்த மார்ச் 2026ல் நிறுத்தப்பட்டிருந்த, தங்களது 3 'பண்டு ஆப் பண்டு' திட்டங்களில், மே 18 முதல் மீண்டும் முதலீடுகளை ஏற்க உள்ளதாக, 'பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக, பி.ஜி.ஐ.எம்., இந்தியாவின் 'குளோபல் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ், எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஈக்விட்டி மற்றும் குளோபல் செலக்ட் ரியல் எஸ்டேட் செக்யூரிட்டீஸ்' திட்டங்களில், முதலீட்டாளர்கள் புதிய எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி., முறைகளில் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ஒரு திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
