தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் 23,313 கூர்ந்து கவனிக்க வேண்டிய லெவல்

டெக்னிக்கல் அனாலிசிஸ் 23,313 கூர்ந்து கவனிக்க வேண்டிய லெவல்

டெக்னிக்கல் அனாலிசிஸ் 23,313 கூர்ந்து கவனிக்க வேண்டிய லெவல்


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

16.10.26 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,065.10 23,149.85 22,913.80 23,146.15

நிப்டி 67 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து, உடனடியாக சற்று இறங்கி 10 மணிக்கு மேல் தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 148 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும், 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு அதிகபட்சமாக 0.71 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி மிட்கேப் 100’ குறியீடு அதிகபட்சமாக 0.11 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில், 8 குறியீடுகள் ஏற்றத்துடனும், 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.92 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி மிட்ஸ்மால் பைனான்ஷியல் சர்விசஸ்’ குறியீடு அதிகபட்சமாக 0.75 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,669 நிறுவனங்களின் பங்குகளில் 2,131 ஏற்றத்துடனும், 1,422 இறக்கத்துடனும், 116 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 10 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்திருப்பதும், எம்.ஏ.சி.டி., பாசிட்டிவ் ஹிஸ்டோகிராமுடன் இருப்பதும் ஏற்றம் தொடர்வதற்கு வாய்ப்புள்ள டெக்னிக்கல் சூழலை காட்டுகிறது. இருந்தாலும் நிப்டி 50 நாள் சராசரிக்கு (23,313) கீழே நிறைவடைந்துள்ளது. ஏற்றம் வந்து 23,313க்கு மேலே நிலைபெற்றால், அடுத்த தடையான 23,550 பகுதியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை இறக்கம் வந்து 22,914க்கு கீழே சென்றால் 22,778 வரை செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. தற்போதைக்கு டெக்னிக்கலாக ஏற்றம் தொடர 23,313 கூர்ந்து கவனிக்க வேண்டிய லெவலாக இருக்கிறது.

ஆதரவு 22990 22834 22744

தடுப்பு 23226 23306 23396

நிப்டி 50


டாடா ஸ்டீல் 175.50 –0.90
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 728.85 2.00
இன்போசிஸ் 1,161.20 51.20
பார்தி ஏர்டெல் 1,905.00 51.00
கோட்டக் மஹிந்திரா பேங்க் 447.40 –0.55
நிப்டி மிட்கேப் 50
எஸ் பேங்க் 17.50 –0.62
சுஸ்லான் எனர்ஜி 42.00 1.05
பெடரல் பேங்க் 338.00 3.00
என்.ஹெச்.பி.சி., 71.44 –1.26
என்.எம்.டி.சி., 71.69 0.87
நிப்டி ஸ்மால்கேப் 50
ஏஞ்சல் ஒன் 300.00 –13.00
கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யுமர் எலக்ட்ரிக்கல்ஸ் 215.50 –0.05
கரூர் வைஸ்யா பேங்க் 354.05 8.40
ஐநாக்ஸ் விண்டு 67.63 –0.95
ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் 615.80 17.70
மற்ற சில பங்குகளின் விலை விபரம்
பாட்டா இந்தியா 640.90 24.85
குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் 149.70 3.10
எல்.ஐ.சி., 397.75 3.75
பூனாவாலா பின்கார்ப் 447.50 6.20
வாஸ்கான் எஞ்சினியர்ஸ் 33.52 3.36



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us